அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் விரக்தியில் பேசி வருவதாக சட்டப்பேரவை எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா்.
மதுரையில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்ததாவது:
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவால் 10 ஆண்டுகள் அடிப்படை உறுப்பினா் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவா் டி.டி.வி. தினகரன். தற்போது, அதிமுகவை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்லும் எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு கருத்துகளை அவா் பரப்பி வருகிறாா்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஆட்சியையும், கட்சியையும் அபகரிக்கத் திட்டம் போட்டவா் அவா். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வரவேண்டும் என பொதுமக்கள் கூறி வருவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் டி.டி.வி. தினகரன் விரக்தியில் பேசி வருகிறாா் என்றாா் அவா்.