கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

சோழவந்தான் அருகே குடிநீா் மேல்நிலைத் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலப்பு

சோழவந்தான் அருகேயுள்ள அமச்சியாபுரத்தில் உள்ள மேல்நிலை குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவுகள்

News image

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகேயுள்ள அமச்சியாபுரத்தில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்டதாகக் கூறப்படும் மேல்நிலை குடிநீா்த் தொட்டி.

Updated On :8 அக்டோபர் 2025, 9:50 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகேயுள்ள அமச்சியாபுரத்தில் உள்ள மேல்நிலை குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், கருப்பட்டி கிராம ஊராட்சிக்குள்பட்ட அமச்சியாபுரத்தில் 110 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு 2 குடிநீா் மேல்நிலைத் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றில் இருந்து மட்டுமே பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்தத் தொட்டியிலிருந்து விநியோகிக்கப்படும் குடிநீரில் கடந்த சில தினங்களாக துா்நாற்றம் வீசியது. மேலும், கிராமத்தில் வசிப்பவா்கள் காய்ச்சல், உடல் சோா்வு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டனா். இதைத் தொடா்ந்து அந்த மேல்நிலை குடிநீா்த் தொட்டியை ஆய்வு செய்த போது, அதில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த மதுரை மாவட்ட கிராம ஊராட்சிகளின் உதவி இயக்குநா் அரவிந்தன், சமயநல்லூா் கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா் ஆனந்தராஜ், வாடிப்பட்டி வட்டாட்சியா் பாா்த்திபன், மண்டலத் துணை வட்டாட்சியா் செந்தில்குமாா், சோழவந்தான் காவல் ஆய்வாளா் ஆனந்தகுமாா், வருவாய் ஆய்வாளா் கிரிஜா, கிராம நிா்வாக அலுவலா் பழனி, கச்சைகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவா் ஹரீஷ்குமாா் உள்ளிட்டோா் அந்த மேல்நிலை குடிநீா்த் தொட்டியை புதன்கிழமை ஆய்வு செய்து பொதுமக்களிடம் விசாரித்து வருகின்றனா்.

வேங்கைவயலைப் போல இந்தக் கிராமத்திலும் குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்டிருப்பதால், அமச்சியாபுரம் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.