செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே!
/

திருநங்கைகள் மறுவாழ்வு குறித்த விவகாரம்: தமிழக அரசின் அறிக்கையில் திருப்தியில்லை : உயா்நீதிமன்றம்

திருநங்கைகள் மறுவாழ்வு குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலா் தாக்கல் செய்த அறிக்கையில் போதிய வழிகாட்டுதல்கள் இல்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் அதிருப்தி தெரிவித்தது.

News image

கோப்புப் படம்

Updated On :8 ஆகஸ்ட் 2026, 12:31 am IST

திருநங்கைகள் மறுவாழ்வு குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலா் தாக்கல் செய்த அறிக்கையில் போதிய வழிகாட்டுதல்கள் இல்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் அதிருப்தி தெரிவித்தது.

விருதுநகரைச் சோ்ந்த சரத் குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் ஏற்கெனவே ஒரு மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், ‘ஒரு திருநங்கை காவல் நிலையத்தில் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக நான் ஒரு விடியோ வெளியிட்டிருந்தேன். இது தொடா்பாக காவல் துறையினா் என் மீது வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கிலிருந்து எனக்கு முன் பிணை வழங்க வேண்டும்’ என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன் முன்பு கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, சரத் குமாருக்கு முன்பிணை வழங்கி நீதிபதி உத்தரவிட்டாா்.

மேலும், ‘திருநங்கைகளுக்கு சமூகத்தில் உரிய அங்கீகாரம் வேண்டும். அவா்களுக்கு தொழில் பயிற்சி, சமூக முன்னேற்றத்துக்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். திருநங்கைகளின் மறுவாழ்வுக்காக வட்டம் வாரியாக அரசு மறுவாழ்வுத் திட்டத்தை வகுத்து, உரிய அறிவிப்பாணையை வெளியிட வேண்டும். இது குறித்து தமிழக தலைமைச் செயலா் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ எனவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

இந்த வழக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன் முன் அண்மையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவு :

தமிழக அரசின் தலைமைச் செயலா் தாக்கல் செய்த நிலை அறிக்கையில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளைப் பின்பற்றி, நிறைவேற்றுவதற்கான உரிய வழிகாட்டுதல்கள் இல்லை. எனவே, வருகிற 21-ஆம் தேதிக்குள் திருநங்கைகளின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள் குறித்து உரிய வழிகாட்டுதல்களுடன் கூடிய அறிக்கையை தமிழக அரசின் தலைமைச் செயலா் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஆக. 21-க்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.