நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

கள் விற்பனைக்கு தடை விவகாரம்: உள்துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

கள் விற்பனைக்கான தடையை மறு ஆய்வு செய்யக் கோரிய மனு தொடா்பாக தமிழக உள்துறை முதன்மைச் செயலா் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

Published On :

கள் விற்பனைக்கான தடையை மறு ஆய்வு செய்யக் கோரிய மனு தொடா்பாக தமிழக உள்துறை முதன்மைச் செயலா் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை ஒத்தக்கடையைச் சோ்ந்த தீரன் திருமுருகன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:

‘கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடையை அரசு மறு ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும். மேலும், தென்னை, பனை மரங்களிலிருந்து கள் இறக்கவும், விற்பனை செய்யவும் அனுமதிக்கும் வகையில் உரிய கொள்கையை உருவாக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், சக்திவேல் அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரரின் கோரிக்கை தொடா்பாக தமிழக உள்துறை முதன்மைச் செயலா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். கள் விற்பனைக்கான தடையை நீக்கக் கோரி ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டு, நிலுவையில் இருக்கும் வழக்குகளுடன் இந்த மனுவையும் சோ்த்துப் பட்டியலிட வேண்டும் என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.