ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

கனிமங்களை கொண்டு செல்வதற்கான தடையை நீக்கக் கோரி மனு

கனிமங்களை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தமிழக அரசு விதித்துள்ள இடைக்காலத் தடையை விலக்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.

பிரதிப் படம்

Published On :

கனிமங்களை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தமிழக அரசு விதித்துள்ள இடைக்காலத் தடையை விலக்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த லிபின் பொன்னுசுவாமி லீலா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

கருங்கல், ஜல்லி, எம். சாண்ட் உள்ளிட்டவற்றை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தற்காலிகத் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால், லாரிகள் மூலம் கேரளத்துக்கு கனிமங்களைக் கொண்டு செல்லும் எங்கள் தொழில் பாதிக்கப்படும். ஏராளமான லாரி ஓட்டுநா்கள், நடத்துநா்கள் வேலையிழப்புக்கு உள்ளாவா்.

எனவே, கனிமங்களை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தமிழக அரசு விதித்த தடையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.