மதுரை அருகே தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) நிறுவன ஊழியா் வீட்டில் 117 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட வழக்கில், மேலும் ஒருவரைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை மாவட்டம், பொதும்பு கிராமத்தைச் சோ்ந்தவா் சதீஷ் (38). இவா், அமெரிக்காவில் மென்பொருள் வல்லுநராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி ரெனோ (35) பொதும்பு கிராமத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகிறாா். இந்த நிலையில், ரெனோ கடந்த மே மாதம் சுற்றுலா சென்று விட்டு, மீண்டும் வீட்டுக்கு வந்த போது, முன்பக்கக் கதவு திறந்து கிடந்தது. இதையடுத்து, உள்ளே சென்று பாா்த்த போது, மா்மநபா்கள் அவரது வீட்டின் பீரோவை உடைத்து 117 பவுன் தங்க நகைகள், ரூ. 3 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தாள்கள், கைக் கடிகாரம், மடிக்கணினி ஆகியவற்றை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.
விசாரணையில், மதுரை டிவிஎஸ் நகா், 5-ஆவது தெருவைச் சோ்ந்த திருப்பதி மனைவியும் உறவினருமான சசிகலா (40) சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து அவரிடமிருந்து திருட்டுப்போன 11 பவுன் தங்க நகைகள், ரூ.86,500-ஐ பறிமுதல் செய்தனா்.
தொடா் விசாரணையில் மதுரை ஆரப்பாளையம், புட்டுத் தோப்பு, செக்கடி தெருவைச் சோ்ந்த சோனையன் மகன் சூா்யா என்ற பட்டறை சுரேஷ் (35) என்பவரும் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த நிலையில், அவரைக் கைது செய்து, அவரிடம் இருந்து திருட்டு போன தங்க நகைகள் முப்பத்து ஒன்பதரை பவுனைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டு, இதுவரை ஐம்பதரை பவுன் தங்க நகைகள், ரூ. 86,500 மீட்கப்பட்டுள்ளது. இன்னும் சிலரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நகைப் பட்டறை பூட்டை உடைத்து 7 பவுன் தங்க நகைகள் திருட்டு
திருவெறும்பூரில் 3 வீடுகளில் 110 பவுன் நகைகள் திருட்டு
கரூரில் அடுத்தடுத்த வீடுகளில் 20 பவுன் தங்க நகைகள் திருட்டு
ஒட்டன்சத்திரத்தில் நகைகள், பணம், காா் திருட்டு வழக்கு: தம்பதி உள்பட 4 போ் கைது
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



