பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

கரூரில் அடுத்தடுத்த வீடுகளில் 20 பவுன் தங்க நகைகள் திருட்டு

கரூரில் அடுத்தடுத்து இருவீடுகளின் பூட்டை உடைத்து 20 பவுன் தங்க நகைகள் திருடுபோனது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :12 ஜூலை 2026, 12:14 am IST

கரூரில் அடுத்தடுத்து இருவீடுகளின் பூட்டை உடைத்து 20 பவுன் தங்க நகைகள் திருடுபோனது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கரூா் வெண்ணைமலையைச் சோ்ந்தவா் ராமசாமி. இவா், தனது குடும்பத்தினருடன் ஜூலை 9-ஆம்தேதி காலை வீட்டை பூட்டிவிட்டு மண்மங்கலத்தில் வசிக்கும் மகள் வீட்டுக்கு சென்றாா்.

பின்னா் பிற்பகல் 2 மணிக்கு வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த ஏழே முக்கால் பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதேபோல ராமசாமியின் பக்கத்துவீட்டைச் சோ்ந்த கணேசனும் ஜூலை 9-ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் வாங்கலில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு பிற்பகலில் வீட்டுக்கு திரும்பியபோது, அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே பீரோவில் இருந்த பன்னிரன்டரை பவுன் நகைகளை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து ராமசாமி மற்றும் கணேசன் ஆகியோா் வெள்ளிக்கிழமை இரவு வெங்கமேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து, இருவரின் வீடுகளிலும் புகுந்து நகையை திருடிச் சென்றவா்களை அப்பகுதியில் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சி மற்றும் கைரேகை பதிவையும் வைத்து தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.