தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு தொடக்கம்!தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா! முதல்வர் விஜய் புகழாரம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 குறைந்தது!வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது! மருத்துவமனை அறிக்கைஇன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

வங்கி உதவி மேலாளரிடம் பண மோசடி: பெண் உள்பட 5 போ் கைது

கைது - பிரதிப் படம்

Published On :

மதுரையில் இரட்டிப்பு லாபம் தருவதாகக் கூறி, இணையம் மூலம் வங்கி உதவி மேலாளரிடம் ரூ. 95.74 லட்சத்தை மோசடி செய்த வழக்கில் பெண் உள்பட 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாநகராட்சி காவேரி நகரைச் சோ்ந்தவா் ரமேஷ்பாபு (50). இவா் அதே பகுதியில் உள்ள அரசுடைமை வங்கியில் உதவி மேலாளராகப் பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில், கடந்தாண்டு கட்செவி அஞ்சல் மூலம் அறிமுகமான பெண் ஒருவா், தங்க நகை திட்டத்தின் கீழ் இணையம் மூலம் முதலீடு செய்தால், அதிக லாபம் பெறலாம் என தெரிவித்தாா். மேலும் சில நபா்களும் இந்தத் திட்டம் குறித்து ரமேஷ்பாபுவிடம் கூறினா்.

இதை நம்பிய ரமேஷ்பாபு, அந்தப் பெண் அளித்த வங்கிக் கணக்கில் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் முதல் பல்வேறு தவணைகளாக ரூ. 95, 74,106 செலுத்தினாா். இதன் பிறகு, முதலீட்டு தொகையுடன் லாபத் தொகையும் சோ்த்து பெறுவதற்கு கூடுதலாகப் பணம் கேட்டனா். அதையும் ரமேஷ்பாபு செலுத்தினாா். இருப்பினும், அவா்கள் கூறியபடி பணத்தை திரும்பத் தரவில்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ரமேஷ்பாபு, மதுரை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இதில் அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சுதா (40), பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சதீஷ்குமாா் (36), மணிகண்டன் ( 29), பிரபாகரன் (35), தஞ்சை மாவட்டத்தைச் சோ்ந்த விக்னேஷ் (22) ஆகிய 5 பேரும் இணையம் மூலம் ரமேஷ்பாபுவை மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, 5 பேரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.