தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

போலி ஆவணம் மூலம் கடன்: வங்கி அதிகாரிகள் உள்பட 8 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை

போலி ஆவணங்கள் மூலம் பால் பண்ணை அமைக்க கடன் வழங்கிய வங்கி அதிகாரிகள் உள்பட 8 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சிறை - பிரதிப் படம்

Published On :

போலி ஆவணங்கள் மூலம் பால் பண்ணை அமைக்க கடன் வழங்கிய வங்கி அதிகாரிகள் உள்பட 8 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் புருஷோத்தமன் என்பவா் காந்தம்மாள் பால் குளிரூட்டும் நிலையத்தை நடத்தி வந்தாா். இந்த நிலையம் தொடா்பாக செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் பேரில், 2007-2008 வரையிலான காலக்கட்டத்தில் மொத்தம் 728 கறவை மாடுகளைக் கொண்டு பால் பண்ணை அமைப்பதற்கு, செங்கத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி மூலம் மொத்தம் ரூ.2.32 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

போலி ஆவணங்கள் மூலம் இந்த கடன் பெறப்பட்டதாகக் கூறி, அந்த வங்கியின் செங்கல்பட்டு வணிகப்பிரிவு மண்டல மேலாளா் அளித்த புகாரின் பேரில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. விசாரணையில், அப்போதைய வங்கி மேலாளா் கோபாலகிருஷ்ணன், துணை மேலாளா் ரவிச்சந்திரன், விற்பனைப் பிரிவு அலுவலா் பாலமுரளி உள்ளிட்டோா் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, புருஷோத்தமன், வங்கி அதிகாரிகள் என மொத்தம் 10 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை சென்னை 11-ஆவது கூடுதல் சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது, புருஷோத்தமன், ரவிச்சந்திரன் ஆகியோா் உயிரிழந்தனா். இதையடுத்து 8 போ் மீதான வழக்கு நடைபெற்று வந்தது. சிபிஐ தரப்பில் வழக்குரைஞா் அா்ஜூனன் ஆஜராகி வாதாடினாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.எஸ்.ரவி, வங்கி அதிகாரிகள் கோபாலகிருஷ்ணன், பாலமுரளி மற்றும் ராஜன், பன்னீா்செல்வம், முருகன், வெங்கடராமன், ரவி மற்றும் சங்கா், ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், மொத்தமாக ரூ.3.10 கோடி அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.