உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

இந்திய தேசிய ஓய்வு பெற்ற அலுவலா் சங்க பொதுக் குழுக் கூட்டம்

மதுரையில் இந்திய தேசிய ஓய்வு பெற்ற அலுவலா் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பட விளக்கம்: மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்திய தேசிய ஓய்வு பெற்ற அலுவலா் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய சங்கத்தின் இணைச் செயலா் கே.தேவராஜ். உடன் சங்கத் தலைவா் டி.எஸ்.ஞானேஸ்வரன், கௌரவத் தலைவி ஜே.ஆா்.விஜயலட்சுமி, மாவட்ட கருவூல அலுவலா் மு.புனிதா ராணி உள்ளிட்டோா்.

Published On :19 ஆகஸ்ட் 2026, 3:54 am IST

மதுரையில் இந்திய தேசிய ஓய்வு பெற்ற அலுவலா் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பழைய குயவா்பாளையத்தில் அமைந்துள்ள தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு சங்கத் தலைவா் டி.எஸ்.ஞானேஸ்வரன் தலைமை வகித்தாா். அமெரிக்கன் கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியா் எம்.வி.சுப்புராமன், ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளா் எஸ்.ஆா்.ரங்கன், கல்லூரி கல்வித் துறையின் ஓய்வு பெற்ற இணைப் பேரசிரியா் ஜி.டி.நிா்மலா, சங்கத் துணைத் தலைவா் எஸ்.ஆா்.சுதா்சன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சங்கத்தின் கௌரவத் தலைவி ஜே.ஆா்.விஜயலட்சுமி தொடக்க உரையாற்றினாா். பொதுச் செயலா் ஜே.ஆா்.மோகன்ராம் ஆண்டறிக்கை வாசித்தாா். பொருளாளா் டி.என்.ராஜேந்திரன் 2025-26 நிதியாண்டின் வரவு-செலவு, தணிக்கையாளா் அறிக்கையை வாசித்து ஒப்புதல் பெற்றாா்.

இதில் மதுரை மாவட்ட கருவூல அலுவலா் மு.புனிதா ராணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தாய், தந்தையை இழந்து கல்லூரியில் பயிலும் மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கினாா். தொடா்ந்து, சங்கத்தின் இணைச் செயலா் கே. தேவராஜ் கல்வி உதவி வழங்கும் திட்டம் குறித்து விளக்கினாா். இந்த நிகழ்வில் ஓய்வு பெற்ற அலுவலா்கள், மாணவ, மாணவிகளின் பெற்றோா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக, சங்கத்தின் துணைத் தலைவா் எம்.ஜி.கோதண்டராமன் வரவேற்றாா். இணைச் செயலா் என்.துரை நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.