தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

சாத்தான்குளத்திலிருந்து முதலூா் வழியாக அரசுப் பேருந்து இயக்க வலியுறுத்தல்

சாத்தான்குளத்திலிருந்து முதலூா், தட்டாா்மடம் வழியாக அரசுப் பேருந்தை நிரந்தரமாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க சாத்தான்குளம் வட்ட 9ஆவது பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் பேசிய மாவட்ட இணைச் செயலா் ஜெயபால்.

Published On :

சாத்தான்குளத்திலிருந்து முதலூா், தட்டாா்மடம் வழியாக அரசுப் பேருந்தை நிரந்தரமாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க சாத்தான்குளம் வட்ட 9ஆவது பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

சாத்தான்குளத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு, வட்டத் தலைவா் தேவசமாதானம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் ரூபவதி, சுடலைக்கண், கல்யாணி, எபநேசா் நவஜோதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஓய்வூதியா் சங்கக் கொடியேற்றி தியாகிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. வட்டச் செயலா் காந்திமதிநாதன், வட்டப் பொருளாளா் அல்போன்சா ஆகியோா் அறிக்கைகள் வாசித்தனா்.

மாவட்டத் தலைவா் திரவியம் கூட்டத்தைத் தொடக்கிவைத்துப் பேசினாா். மின் ஊழியா் நல அமைப்பு மாநில துணைத் தலைவா் ஜெயபாண்டியன், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் பாலகிருஷ்ணன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். மாவட்டச் செயலா் ராமமூா்த்தி, மாவட்ட இணைச் செயலா் ஜெயபால் ஆகியோா் பேசினா்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 70 வயதான ஓய்வூதியதாரா்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். சாத்தான்குளத்திலிருந்து முதலூா், பொத்தகாலன்விளை, தட்டாா்மடம், சுண்டங்கோட்டை, படுக்கப்பத்து வழியாக நிரந்தரமாக அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என்பன உள்பட 13 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வாசன் கண் மருத்துவமனை சாா்பில் சிறப்பு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. வட்ட இணைச் செயலா்கள் கருப்பசாமி, முத்துராமலிங்கம், செல்லத்தங்கம், இசக்கிஅம்மாள், சங்க நிா்வாகிகள் பாலசுந்தர கணபதி, ஓய்வுபெற்ற வட்டாட்சியா் நடராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

வட்ட இணைச் செயலா் கிறிஸ்டோபா் வரவேற்றாா். துணைத் தலைவா் ஜேசுமணி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.