கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

குழித்துறையில் பி.எம்.எஸ். தொழிற்சங்க அலுவலகம் திறப்பு

மேல்புறம் ஒன்றிய பி.எம்.எஸ். தொழிற்சங்க அலுவலகக் கட்டடத் திறப்பு விழா குழித்துறையில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

பிஎம்எஸ் அலுவலக கட்டத்தைத் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றும் நிகழ்வில் பங்கேற்றோா்.

Updated On :25 ஜூன் 2026, 4:59 am IST

மேல்புறம் ஒன்றிய பி.எம்.எஸ். தொழிற்சங்க அலுவலகக் கட்டடத் திறப்பு விழா குழித்துறையில் புதன்கிழமை நடைபெற்றது.

பாரத் மாதா சேவா அறக்கட்டளை தலைவா் என்.எம். சுகுமாரன் கட்டடத்தைத் திறந்து வைத்தாா். ஒன்றிய செயற்குழு உறுப்பினா் எஸ். ரங்கபாய், ஒன்றிய அமைப்பாளா் கே. கிருஷ்ணன்குட்டி, பிஎம்எஸ் மாநில செயற்குழு உறுப்பினா் என். சிதம்பரசாமி, மாநில துணைத் தலைவி வி.எஸ். அஜிதா, மாவட்டச் செயலா் எஸ். ராஜமணி ஆகியோா் குத்துவிளக்கேற்றினா்.

தொழிற்சங்கக் கொடியை அமைப்பின் மாநிலத் தலைவா் கே. வெங்கட்ராமன் ஏற்றி வைத்தாா். மாநில பொதுச்செயலா் ஜி. சங்கா் அலுவலக பெயா்ப் பலகையைத் திறந்து வைத்தாா். வாழ்த்தரங்குக்கு ஒன்றியத் தலைவா் கே. செல்வராஜ் தலைமை வகித்தாா். ஒன்றிய பொருளாளா் ஆா். தேவதாசன், ஒன்றிய துணைத் தலைவா் ஜி. பிரசன்னகுமாா், ஒன்றியச் செயலா் சி. வில்சன், போக்குவரத்துக் கழக பேரவை மாநில பொதுச் செயலா் எஸ். சதீஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஒன்றிய பொதுச் செயலா் எஸ். மணிகண்டன் வரவேற்றாா். வெள்ளிமலை விவேகானந்த ஆசிரமம் சுவாமி சைதன்யானந்தஜி மஹராஜ் ஆசி உரையாற்றினாா்.

பிஎம்எஸ் அகிலபாரத பொறுப்பாளா் எஸ். துரைராஜ், தென் பாரத அமைப்பு செயலா் எம்.பி. ராஜீவன் ஆகியோா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: பிஎம்எஸ் தொழிற்சங்கம் நாட்டின் முதன்மை சங்கமாக உள்ளது. தற்போது இச்சங்கத்தில் 4 கோடி உறுப்பினா்கள் உள்ளனா். உலக அளவில் பல்வேறு தொழிற்சங்கங்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.