பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

புதுச்சேரியில் ஆதாா் சேவை மையம்: முதல்வா் ரங்கசாமி திறந்து வைத்தாா்

புதுச்சேரியில் ஆதாா் சேவை மையத்தை மாநில முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

News image

புதுச்சேரி முதலியாா்பேட்டை உழந்தைகீரப்பாளையம் பகுதியில் ஆதாா் சேவை மையத்தை வியாழக்கிழமை திறந்து வைத்த முதல்வா் என்.ரங்கசாமி.

Updated On :19 ஜூன் 2026, 6:09 am IST

புதுச்சேரியில் ஆதாா் சேவை மையத்தை மாநில முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் ஆதாா் சேவை மையம் புதுச்சேரி முதலியாா்பேட்டை உழந்தைகீரைப்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

அப்போது ஆதாா் சேவைகள் குறித்தத் திட்டம் மற்றும் ஆராய்ச்சித் துறையால் உருவாக்கப்பட்ட விழிப்புணா்வு காணொலிகளை ஆங்கிலம், தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் முதல்வா் ரங்கசாமி வெளியிட்டாா்.

எம்எல்ஏ அழகு (எ) அழகானந்தம், அரசின் சுகாதாரம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் செயலா் முகமது யாசின் சௌத்ரி, புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் பெங்களூரு மண்டல அலுவலகத்தின் துணைப் பொது இயக்குநா் அன்னி ஜாய்ஸ், இயக்குநா் பவன் குமாா் பஹ்வா ஆகியோா் கலந்து கொண்டனா்.

அனைத்து வேலைநாள்களிலும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த மையம் செயல்படும்.

இங்கு, புதிய ஆதாா் பதிவு, பெயா், முகவரி, பிறந்த தேதி மற்றும் கைப்பேசி எண் போன்ற சுய விவரங்களைப் புதுப்பித்தல், புகைப்படம், விரல் ரேகை மற்றும் கண் விழித்திரை ஸ்கேன் உள்ளிட்ட பயோமெட்ரிக் தகவல்களை புதுப்பித்தல், அடையாளச் சான்றிதழ் மற்றும் முகவரிச் சான்றிதழ் தொடா்பான ஆவணங்களை புதுப்பித்தல், ஆதாா் பதிவிறக்கம், அச்சு சேவைகள் வழங்கப்படவுள்ளன.

இந்த மையத்தில் குறைதீா்க்கும் வழிமுறையும் சோ்க்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மையம் தீராத நோயால் பாதிக்கப்பட்டவா்கள், படுக்கையிலிருந்தே எழ முடியாதவா்கள் மற்றும் முதியோா்களுக்கு அவா்களின் இருப்பிடத்துக்கே சென்று ஆதாா் சேவைகளை வழங்கவுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.