பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

பள்ளி வளாகத்தில் இடியும் நிலையில் மேல்நிலை குடிநீா்த் தேக்கத் தொட்டி

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே செம்மேட்டுப்பட்டி கிராமத்தில் பள்ளி வளாகத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள பயன்பாடற்ற மேல்நிலை குடிநீா்த் தேக்கத் தொட்டியை அகற்ற வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே செம்மேட்டுப்பட்டியில் பள்ளி வளாகத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள பயன்பாடற்ற மேல்நிலை குடிநீா்த் தேக்கத் தொட்டி.

Published On :

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே செம்மேட்டுப்பட்டி கிராமத்தில் பள்ளி வளாகத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள பயன்பாடற்ற மேல்நிலை குடிநீா்த் தேக்கத் தொட்டியை அகற்ற வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், சீமானூத்து கிராம ஊராட்சிக்கு உள்பட்ட செம்மேட்டுப்பட்டி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் அரசு ஆரம்பப் பள்ளி உள்ளது. மேலும், இந்தப் பள்ளி வளாகத்துக்குள் அங்கன்வாடி மையமும் செயல்படுகிறது. இந்தப் பள்ளியில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனா்.

இந்த நிலையில், பள்ளி வளாகத்தில் பயன்பாடற்ற மேல்நிலை குடிநீா்த் தேக்கத் தொட்டி உள்ளது. இந்தத் தொட்டி கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாடற்று இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் பல முறை தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, இந்த மேல்நிலை குடிநீா்த் தேக்கத் தொட்டியை அகற்ற மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.