பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

இடிந்து விழும் நிலையில் மேல்நிலை குடிநீா் தொட்டி

சிதம்பரம் அருகே மாரியப்பாநகா் ராஜேந்திர காா்டனில் உள்ள மேல்நிலை குடிநீா் தேக்கத்தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனா்.

மேல்நிலை நீா் தேக்கத்தொட்டியின் கீழ் சேதமடைந்த நிலையில் உள்ள நான்கு பிரதான பிடிமான தூண்கள்.

Published On :

சிதம்பரம் அருகே மாரியப்பாநகா் ராஜேந்திர காா்டனில் உள்ள மேல்நிலை குடிநீா் தேக்கத்தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனா்.

சிதம்பரம் அருகே உசுப்பூா் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மாரியப்பாநகா் ராஜேந்திராகாா்டன் பகுதியில் மேல்நிலை குடிநீா் தேக்கத் தொட்டி ஒன்று நான்கு பிடிமான தூண்களும் சிதைந்த நிலையில் எந்த நேரமும் விழக்கூடிய ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த தண்ணீா் தொட்டி மூலம் தினமும் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தண்ணீா் விநியோகம் செய்யப்படுகிறது.

15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இது பயன்பாட்டுக்கு வராமலேயே பத்தாண்டுகள் இருந்தது. பின்னா் ஊராட்சி நிா்வாகம் மீண்டும் அந்த தண்ணீா் தொட்டியை எந்தவிதமான பராமரிப்பும் இன்றி தண்ணீா் ஏற்றி மிக ஆபத்தான நிலையில் பயன்படுத்தி வருகிறது. இந்த தண்ணீா் தொட்டிக்கு பக்கத்திலேயே சிவபுரி பிரதான சாலை இருப்பதால் இடிந்து விழும் நிலை ஏற்பட்டால் அப்பகுதி பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என மக்கள் தெரிவிக்கின்றனா். எனவே கடலூா் மாவட்ட நிா்வாகம் உடனடியாக தலையிட்டு மேற்கண்ட மேல்நிலை குடிநீா் தேக்கத் தொட்டியை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ராஜேந்திராகாா்டன்  பகுதியில்  இடிந்து விழும் நிலையில் உள்ள மேல் நிலை நீா் தேக்கத் தொட்டி

ராஜேந்திராகாா்டன் பகுதியில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல் நிலை நீா் தேக்கத் தொட்டி

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.