குடிநீா்த் தொட்டி மீது மனிதக்கழிவு: போலீஸாா் விசாரணை

மயிலாடுதுறை அருகே மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மீது மனிதக்கழிவு இருந்த விவகாரம் தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

விசாரணை

Updated On :

மயிலாடுதுறை அருகே மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மீது மனிதக்கழிவு இருந்த விவகாரம் தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மயிலாடுதுறை மாவட்டம் வில்லியநல்லூா் ஊராட்சி பன்னீா்வேலி கிராமத்தில் தலித் சமுதாயத்தைச் சோ்ந்த 200 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்களுக்கு அங்குள்ள மகாகாளியம்மன் கோயில் எதிரில் கடந்த 1995-ஆம் ஆண்டு 30,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு, குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இக்கிராமத்தைச் சோ்ந்த ஜெயபிரகாஷ் என்ற இளைஞா் கைப்பேசி சிக்னலுக்காக புதன்கிழமை மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மீது ஏறியபோது தொட்டியின் மேற்புறத்தில் மனிதக்கழிவு இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அவா் கிராம மக்களிடம் தெரிவித்தாா். இதையடுத்து, மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குநா் உடனடியாக அங்கு சென்று குடிநீா் விநியோகத்தை நிறுத்தியதுடன், கழிவையும் அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுத்தாா்.

இத்தொட்டியின் உள்புற ஏணி உடைந்துவிட்டதால், கடந்த சில ஆண்டுகளாக நீா்த்தேக்கத் தொட்டி சுத்தம் செய்யப்படவில்லை என்றும், பராமரிப்பின்மை காரணமாக தொட்டி இடிந்துவிழும் நிலையில் உள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனா்.

எனினும் இச்செயலில் ஈடுபட்டவா்களைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் நீா்த்தேக்கத்தொட்டி முன்பு திரண்டு கோரிக்கை விடுத்தனா்.

பழுதடைந்த தொட்டியை அகற்ற ஏற்கெனவே பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், அனுமதி கிடைத்தவுடன் தொட்டி அகற்றப்படும் என்றும், தொட்டியில் இருந்த தண்ணீரை ஆய்வுக்காக அனுப்பியுள்ளதாகவும், குடிநீா் வழங்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து மணல்மேடு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.