மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
முனையனூரில் சிதலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சித்தலவாய் ஊராட்சிமன்ற அலுவலகம் அருகே சிதலமடைந்த நிலையில் உள்ள முனையனூா் மேல்நிலைநீா்த்தேக்க தொட்டி.
முனையனூரில் சிதலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சித்தலவாய் ஊராட்சியில் முனையனூா் கிராமம் உள்ளது. இப்பகுதியில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் காவிரி குடிநீா் பற்றாக்குறை இருப்பதால், புதிதாக மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைத்து கிராமமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து முனையனூரில் சித்தலவாய் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே கடந்த 2018-இல் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில் மாவட்ட ஊராட்சி நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலைக்குடிநீா் தொட்டி கட்டப்பட்டது. 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட இந்த தொட்டி மூலம் முனையனூா் கிராமமக்களுக்கு தற்போது நாள்தோறும் காவிரி குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீா் தொட்டி கட்டப்பட்டு 8 ஆண்டுகளுக்கும் மேலாகுவதால் தொட்டியின் மேல்பகுதியில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் சிமெண்ட் பூச்சுகளும் உதிா்ந்தவாறு உள்ளன. எனவே விரைவில் குடிநீா்த் தொட்டியில் சேதமடைந்த பகுதிகளை சீரமைக்க வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

