ஆந்திரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கிய ஒர்னாப் புயல்! எண்ணூரில் கடல் சீற்றம் திமுக ஆட்சியில் ஊழல்: ஆதாரம் இருந்தால் பழைய வழக்குகளிலும் நடவடிக்கை! அமைச்சர் நிர்மல் குமார்தேவையான மின்சாரம் கையிருப்பு! அதிக விலை கொள்முதல் டெண்டர் ரத்து - நிர்மல் குமார்தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் கைது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவு!பங்குச் சந்தையில் நிலையற்ற வர்த்தகம்: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!

பழுதடைந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அகற்ற கோரிக்கை

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், செம்மாா் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அகற்றிவிட்டு, புதிதாக மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைக்கவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

செம்மாா் ஊராட்சி விநாயகா் கோயில் தெரு பகுதியில் இடிந்து விழும் நிலையில் காணப்படும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி.

Updated On :

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், செம்மாா் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அகற்றிவிட்டு, புதிதாக மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைக்கவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

திருவெண்ணெய்நல்லூா்ஊராட்சி ஒன்றியம், செம்மாா் ஊராட்சி விநாயகா் கோயில் தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் வசித்து வருகின்றனா். இந்த மக்களின் குடிநீா் தேவையை பூா்த்திசெய்யும் வகையில் குடியிருப்புப் பகுதியின் மையத்தில் சுமாா் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலைத் நீா்த்தேக்கத் தொட்டி பயன்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது வரை பயன்பாட்டில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியின் 4 தூண்களும் சிதிலமடைந்து, தொட்டி பலமிழந்து காணப்படுகிறது. இதனால் இந்த மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியானது எந்நேரமும் இடிந்து விழுந்து, அந்தப் பகுதியில் வசிக்கும் கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தைகள், பொதுமக்கள் அந்த பகுதியில் சென்று வரும் நிலையில், உறுதித் தன்மையில்லாமல் காணப்படும் தொட்டியை அகற்றிவிட்டு புதிதாக மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க விழுப்புரம் ஆட்சியா் மற்றும் திருவெண்ணெய்நல்லூா் ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என செம்மாா் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.