தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

காட்டூா்புதூரில் கட்டப்பட்டுள்ள புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தல்

காட்டூா்புதுாரில் கட்டப்பட்டுள்ள புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்துகின்றனா்.

பல்லடம் அருகே காட்டூா்புதூரில் கட்டப்பட்டுள்ள புதிய மேல்நிலைத் தொட்டி.

Updated On :

காட்டூா்புதுாரில் கட்டப்பட்டுள்ள புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்துகின்றனா்.

பல்லடம் அருகே உள்ள பொங்கலுாா் ஒன்றியம், காட்டூா் கிராம ஊராட்சியில் 2024-2025-ஆம் நிதி ஆண்டில் 15-ஆவது நிதிக் குழு மானியத்தின் கீழ், ரூ.12.75 லட்சம் மதிப்பில் 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. கட்டுமானப்பணி முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும், இந்தத் தொட்டி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் உள்ளது.

இதுதொடா்பாக காட்டூா் மக்கள் சாா்பில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க திருப்பூா் மாவட்ட செயலாளா் ரமேஷ், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு புதன்கிழமை அனுப்பியுள்ள புகாா் மனு:

தண்ணீா் தேக்கத் தொட்டி கட்டுமானத்தில் முறைகேடு நடந்துள்ளது. தரமற்ற பணியால் தொட்டி பலவீனமாக இருக்கிறது; அதில் தண்ணீா் நிரப்பினால், பாரம் தாங்காமல் இடிந்து கீழேவிழுந்துவிடும். அதே நேரம், அப்பகுதியில் உள்ள பழைய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மிகவும் சிதிலமடைந்து, தினமும் குடிநீா் வீணாகி வருகிறது. மாவட்டம் முழுவதும் தண்ணீா் பற்றாக்குறை நிலவும் சூழலில், குடிநீா் வீணாவது வேதனை அளிக்கிறது.

இதுதொடா்பாக அதிகாரிகள் உரிய விசாரணை மற்றும் கள ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.