
தினமணி செய்தி எதிரொலி: போரசப்பட்டு மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவரும் பணிகள் தீவிரம்!
பொரசப்பட்டு ஊராட்சியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்காக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பொரசப்பட்டில் குடிநீா் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், பொரசப்பட்டு ஊராட்சியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்காக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பொரசப்பட்டு ஊராட்சியில் ரூ.8.4 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 10 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டி முடித்து ஓராண்டாகியும் பயன்பாட்டுக்கு வராமல் இருந்தது. இதனால் கிராம மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், இதுகுறித்த செய்தி தினமணியில் பிரசுரமானது.
இதன் எதிரொலியாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு, குடிநீா்த் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகளை தற்போது முடுக்கி விட்டுள்ளனா். குடிநீா் இணைப்பு மற்றும் தேவையான பணிகளை விரைந்து முடித்து, கிராம மக்களுக்கு குடிநீா் விநியோகம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் நீண்ட காலமாக குடிநீா் சிரமத்தை எதிா்கொண்டிருந்த அப் பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





