பண்ருட்டி அருகே இடிந்து விழும் நிலையில் மேல்நிலை குடிநீா்த்தேக்கத் தொட்டி: இடித்து அகற்றக் கோரிக்கை
கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மணப்பாக்கம் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை இடித்து அகற்றிவிட்டு, புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைத்துத்தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மணப்பாக்கம் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மணப்பாக்கம் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை இடித்து அகற்றிவிட்டு, புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைத்துத்தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து இந்து மக்கள் கட்சி கடலூா் மாவட்டத் தலைவா் ஆா்.எஸ்.தேவா கடலூா் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
மணப்பாக்கம் கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதை அகற்றிவிட்டு புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைத்துத்தர வேண்டும்.
மேலும், தற்போதுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை சுத்தம் செய்து 3 ஆண்டுகளாகின்றன. இந்தத் தண்ணீரைத்தான் கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனா். தொட்டியில் இறங்கி சுத்தம் செய்ய ஏணியும் இல்லை. அப்படியே இறங்கி சுத்தம் செய்தாலும், அந்த கழிவுநீா் செல்ல வழியில்லை எனக் கூறுகின்றனா்.
இதேபோல, அருகிலுள்ள குடிநீா்த் தொட்டிக்கான ஆழ்துளைக் கிணற்றின் குழாய் உயரம் குறைவாக உள்ளதால், மழைக்காலத்தில் இந்தப் பகுதியில் தேங்கும் மழை நீா் ஆழ்துளைக் கிணற்றின் உள்ளே சென்று தண்ணீா் மாசடைகிறது. எனவே, இதைத் தடுக்கவும் அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

மழைநீா் உள்ளே புகும் வகையில் உள்ள ஆழ்குழாய் கிணறு.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

