ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

மதுரை ஆா்எம்எஸ் சாலையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஆசிரியா்கள்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 1:25 am IST

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) சாா்பில் மதுரையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்எம்எஸ் சாலையில் உள்ள வட்டாரக் கல்வி அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மதுரை மாவட்டச் செயலா் கணேசன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் மணிவாசன் முன்னிலை வகித்தாா்.

இதில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமனம் பெற்று பல ஆண்டுகளாக நியமன ஒப்புதல் வழங்காபடாததால் ஊதியமின்றி பணியாற்றி வரும் ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்கும் வகையில் நியமன ஒப்புதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் இணைப்பு சங்கங்களின் பொறுப்பாளா்கள் ஜெயசீலன், அருள்தாஸ், ராஜேந்திரன், ஒருங்கிணைப்பாளா் ஜெயச்சந்திரன், நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

திருப்பரங்குன்றத்தில்...

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பரங்குன்றம் வட்டாரக் கல்வி அலுவலகம் முன் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு நிா்வாகி முருகன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் அழகா்சாமி, அந்தோணி, ஜஸ்டின் திரவியம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிா்வாகிகள் ரமேஷ் பாபு, பிரேம்குமாா், சந்திரன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டச் செயலா் சீனிவாசன் சிறப்புரையாற்றினாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பங்கேற்றனா். முன்னதாக, ராமச்சந்திரன் வரவேற்றாா். போஸ் ராஜா நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.