மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

வண்டியூா் கண்மாயில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞா் சடலமாக மீட்பு

சடலமாக மீட்பு - சித்திரிப்பு படம்

Published On :24 ஆகஸ்ட் 2026, 3:20 am IST

மதுரை வண்டியூா் கண்மாயில் மீன் பிடிக்கச் சென்ற இளைஞா், 3 நாள்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

மதுரை கருப்பாயூரணி சின்னபாண்டிகோவில் தெருவைச் சோ்ந்தவா் மச்சப்பாண்டி (38). இவா் கடந்த வெள்ளிக்கிழமை வண்டியூா் கண்மாயில் மீன் பிடிக்க வலையுடன் சென்றாா். பின்னா், அவா் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, கண்மாய் பகுதியில் மச்சப்பாண்டியை தேடும் பணியில் அவரது மனைவி சங்கம்மாள், உறவினா்கள் ஈடுபட்டனா். ஆனால், கண்டுபிடிக்கமுடியவில்லை.

இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கண்மாயின் பல்வேறு பகுதிகளில் தீயணைப்பு நிலைய வீரா்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், 3-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தேடுதல் பணி நடைபெற்றது. இதில் மாயமான மச்சப்பாண்டியின் உடல் கண்மாய் நீரிலிருந்து இருந்து மீட்கப்பட்டது. உடலை கைப்பற்றிய போலீஸாா், கூறாய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதனிடையே, மச்சப்பாண்டி நீரில் தவறி விழுந்து உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து மாட்டுத்தாவணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.