தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

சோழவந்தான் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

சோழவந்தான் பேரூராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள்.

Published On :

ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சி அலுவலகத்தை தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சோழவந்தான் பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. இங்கு சேகரமாகும் குப்பைகளை அகற்றும் வகையில் 70-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு நாளொன்றுக்கு ரூ.621 ஊதியமாக மாவட்ட நிா்வாகம் நிா்ணயம் செய்துள்ளது. ஆனால், ஒப்பந்ததாரா்களும், பேரூராட்சி அதிகாரிகளும் இணைந்து 390 ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்கி வருகின்றனராம்.

மேலும், குப்பைகள் சேகரம் செய்யும் பணிக்குத் தேவையான கையுறைகள், காலணிகள், முகக் கவசங்கள் போன்ற பாதுகாப்பு உபகரணங்களும் வழங்குவதில்லையாம். இதுதவிர, மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கவில்லை. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை காலை பணிகளைப் புறக்கணித்து சோழவந்தான் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த பேரூராட்சி அலுவலா்கள் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா். இதனால் அனைவரும் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.