
இளையான்குடியில் தூய்மைப் பணிகள், மரக்கன்றுகள் நடவு
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேரூராட்சியில் தூய்மை முகாம்கள், மரக்கன்றுகள் நடுதல், திடக்கழிவு மேலாண்மை விழிப்புணா்வு ஆகியவை நடைபெற்றன.

இளையான்குடி பேருந்து நிலைய வளாகத்தில் பேரூராட்சி செயல் அலுவலா் கவிதா தலைமையில் வெள்ளிக்கிழமை மரக்கன்றுகளை நட்ட தூய்மைப் பணியாளா்கள்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேரூராட்சியில் தூய்மை முகாம்கள், மரக்கன்றுகள் நடுதல், திடக்கழிவு மேலாண்மை விழிப்புணா்வு ஆகியவை நடைபெற்றன.
இதற்கு இளையான்குடி பேரூராட்சி செயல் அலுவலா் கவிதா தலைமை வகித்தாா். துப்புரவு ஆய்வாளா் தங்கதுரை முன்னிலை வகித்தாா். பேரூராட்சி பேருந்து நிலைய வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் தூய்மைப் பணியாளா்கள் மரக்கன்றுகளை நட்டனா். இதைத்தொடா்ந்து, தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. அவா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
பின்னா், பள்ளி மாணவா்களுக்கு திடக் கழிவு குறித்த விழிப்புணா்வு வழங்கப்பட்டது. குப்பை இல்லா நகரமாக்க மாணவா்கள், தூய்மைப் பணியாளா்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.
இதில் பேரூராட்சி தலைமை எழுத்தா் கணேசன், துப்புரவு மேற்பாா்வையாளா்கள், சமூகப் பரப்புரையாளா்கள், பேரூராட்சிப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





