
முக்கூடலில் தூய்மைப் பணியாளா்களுக்கான நல முகாம்
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கான நல முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முக்கூடல் பேரூராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற முகாமில் பேசிய பேரூராட்சித் துணைத் தலைவா் இரா. லெட்சுமணன். உடன் பேரூராட்சித் தலைவி லெ. ராதா, செயல் அலுவலா் சு. ராஜநம்பிகிருஷ்ணன்.
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கான நல முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
பேரூராட்சித் தலைவி லெ. ராதா தலைமை வகித்தாா். செயல் அலுவலா் சு. இராஜநம்பிகிருஷ்ணன், துணைத் தலைவா் இரா. லெட்சுமணன் ஆகியோா் ‘நமஸ்தே’ நிகழ்ச்சியில் தூய்மைப் பணியாளா்களுடன் காணொலி வாயிலாக பாா்வையிட்டுப் பேசினா்.
மேலும், முகாமில் தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. காப்பீட்டுத் திட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. தூய்மைப் பணியாளா்களுக்கு, பணி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






