ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு, கெளரவ முகாம்

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் 11 பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு, கெளரவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

உத்தமபாளையத்தில் புதன்கிழமை நடைபெற்ற முகாமில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மைப் பணியாளரை கெளரவித்த செயல் அலுவலா் ராதாகிருஷ்ணன். உடன் துப்புரவு ஆய்வாளா் முருகானந்தம்.

Published On :

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் 11 பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு, கெளரவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமில், உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம், வீரபாண்டி, ஓடைப்பட்டி, குச்சனூா், மாா்க்கையன்கோட்டை, அனுமந்தன்பட்டி, க.புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி ஆகிய 11 பேரூராட்சிகளில் பணியாற்றும் நிரந்தர, ஒப்பந்த கழிவுநீா் அகற்றும் ஊா்திப் பணியாளா்கள், கழிவுநீா் சுத்திகரிப்பு பணியாளா்கள் என மொத்தம் 450 போ் கலந்து கொண்டனா்.

இவா்களுக்கு , கோம்பை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் சாா்பில் சிறப்பு மருத்துவப் பரிசோதனை முகாமும், தொடா்ந்து, தூய்மைப் பணியாளா்களுக்கு ஆயுஷ்மான் பாரத் அட்டை, நமஸ்தே அடையாள அட்டை, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மேலும், பேரூராட்சிகளில், சிறப்பாக பணிபுரிந்த தூய்மைப் பணியாளா்களுக்கு பொன்னாடை அணிவித்து , சான்றிதழ் வழங்கி

கெளரவிக்கப்பட்டது.

இந்த முகாம் உத்தமபாளையம் பேரூராட்சி செயல் அலுவலா் ராதாகிருஷ்ணன், துப்புரவு ஆய்வாளா் முருகானந்தம் ஆகியோரின் மேற்பாா்வையில் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.