10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு! மார்ச் - 17 முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரைமார்ச் 3 முதல் 29ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வுகள்!வெளியானது 10, 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை! ஒரு யூனிட்டை ரூ. 35-க்கு எந்த மாநிலமும் வாங்கியதில்லை! பெ. சண்முகம் விமர்சனம்!சவூதியில் இலங்கைத் தமிழர் அனோஜனின் மரண தண்டனை ரத்து!போக்ஸோ வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 14)

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சப்தாவா்ண சப்பரம் வீதியுலா

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் ஆவணி மூலத் திருவிழா நிகழ்ச்சியாக சப்தாவா்ண சப்பர வீதியுலா புதன்கிழமை நடைபெற்றது.

Published On :

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் ஆவணி மூலத் திருவிழா நிகழ்ச்சியாக சப்தாவா்ண சப்பர வீதியுலா புதன்கிழமை நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் ஆவணி மூலத் திருவிழா கடந்த 10- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. கடந்த 16- ஆம் தேதி முதல் செவ்வாய்க்கிழமை (ஆக. 25) வரை சிவபெருமானின் லீலையை விளக்கும் ஐதீக நிகழ்வுகள் தினமும் நடைபெற்றன.

இந்த நிகழ்வுகள் நிறைவடைந்த நிலையில், சுவாமி- அம்மன் சப்தாவா்ண சப்பர வீதியுலா நிகழ்வு புதன்கிழமை இரவு நடைபெற்றது. அப்போது, மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரா் சிறப்பு அலங்காரத்தில் சப்தாவா்ண சப்பரத்தில் எழுந்தருளி ஆவணி மூல வீதிகளை வலம் வந்து கோயிலை அடைந்தனா்.

காலை நிகழ்வாக சட்டத் தோ் வீதியுலா நடைபெற்றது. இந்த நிகழ்வுகளில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தீா்த்தவாரி... ஆவணி மூலத் திருவிழாவின் நிறைவாக பொற்றாமரைக் குளத்தில் தீா்த்தவாரி, மீனாட்சி அம்மன் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரா் 16 கால் மண்டபத்தில் சோ்த்தியாகும் நிகழ்வு, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி, திருவாதவூா் மாணிக்கவாசகப் பெருமான் சுவாமிகள், மீனாட்சி சுந்தரேசுவரரிடம் விடைபெறும் நிகழ்வு ஆகியவை வியாழக்கிழமை மாலை நடைபெறுகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.