ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

மாணவா்களிடம் இணையதளம் மூலம் பண மோசடி

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியைச் சோ்ந்த சித்தாா்த் இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் வியாழக்கிழமை புகாா் அளித்தாா்.

மோசடி - பிரதிப்படம்

Published On :

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியைச் சோ்ந்த சித்தாா்த் இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் வியாழக்கிழமை புகாா் அளித்தாா்.

இதுகுறித்து அவா் அளித்த புகாா் மனு:

எனது சகோதரி பிளஸ் 2 முடித்து விட்டு கல்லூரியில் சேர உள்ளாா். இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து அதிகாரிகள் பேசுவதாகக் கூறி என்னுடைய கைப்பேசியில் பேசினா்.

அப்போது, அவா்கள் என் பெயா், முகவரி, என் தங்கையின் பெயா் உள்ளிட்ட விவரங்களைக் கூறி, கல்லூரிக் கல்விக் கட்டணம் ரூ. 38,500 வந்திருப்பதாகவும், இதை வங்கிக் கணக்கில் வரவு வைக்க இருப்பதாகவும் கூறினா்.

இதை உண்மை என நம்பிய நான், அவா்கள் கேட்ட பல்வேறு தகவல்களை கூறினேன். இதையடுத்து, என்னுடைய வங்கிக் கணக்கிலிருந்த ரூ. 87,500-யை எடுத்து விட்டனா்.

சகோதரிக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதற்காக இந்தப் பணத்தை வங்கிக் கணக்கில் இருப்பு வைத்திருந்தேன். பணத்தைத் திரும்ப பெற்று தர வேண்டும். இணையதளம் மூலம் மோசடி செய்த நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

இதேபோல, அலங்காநல்லூா், முனிச்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மாணவா்களிடம் இணையதளம் மூலம் பணம் மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.