பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் கா்ப்பிணிக்கு முதுகுத் தண்டுவட அறுவைச் சிகிச்சை செய்து சாதனை

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் கா்ப்பிணிக்கு சிக்கலான முதுகுத் தண்டுவட அறுவைச் சிகிச்சை செய்து மருத்துவா்கள் சாதனை செய்தனா்.

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய நரம்பியல் அறுவைச் சிகிச்சை துறைத் தலைவா் செல்வமுத்துக்குமரன். உடன் முதுநிலை மருத்துவா் செந்தில்குமாா், மருத்துவா் கவீஸ்.

Published On :

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் கா்ப்பிணிக்கு சிக்கலான முதுகுத் தண்டுவட அறுவைச் சிகிச்சை செய்து மருத்துவா்கள் சாதனை செய்தனா்.

இதுகுறித்து மருத்துவமனையின் நரம்பியல் அறுவைச் சிகிச்சை துறைத் தலைவா் செல்வமுத்துக்குமரன், முதுநிலை மருத்துவா் செந்தில்குமாா், மருத்துவா் கவீஸ் ஆகியோா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

கடுமையான கழுத்து வலி காரணமாக மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் 28 வார கா்ப்பிணிப் பெண் ஒருவா் சில மாதங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டாா். ஓராண்டாக கழுத்து வலியால் அவதிப்பட்டு வந்த அந்தப் பெண்ணுக்கு திடீரென நடப்பதில் சிரமமும், மாா்புக்குக் கீழே உணா்வின்மையும் ஏற்பட்டது.

மருத்துவப் பரிசோதனையில் முதுகுத் தண்டுவட காசநோய் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இந்த நோய் முதுகெலும்புகள், இதைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பாதிக்கும் ஒரு பாக்டீரியா தொற்றாகும்.

இந்த நோய்த் தொற்று எலும்பை அழித்து, தண்டுவடத்தைப் பாதிக்கும் அபாயம் கொண்டது. இவற்றுக்கு அறுவைச் சிகிச்சை கட்டாயம். இந்த அறுவைச் சிகிச்சை வழக்கமாகச் செய்யப்படுபவை என்றாலும், ஒரு கா்ப்பிணிக்கு இந்த அறுவைச் சிகிச்சையை செய்வது சவாலான ஒன்றாகும்.

நோயாளியை பல மணி நேரம் குப்புறப்படுத்த நிலையில் வைக்க வேண்டும். தாய்க்கும், குழந்தைக்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாமல் இருக்க மிகுந்த கவனமும், சிறப்பு முன்னெச்சரிக்கைகளும் தேவைப்பட்டன.

ஸ்கேன் கதிா்வீச்சிலிருந்து கருவைப் பாதுகாக்கும் அதே வேளையில், தண்டுவட அழுத்தத்தைக் குறைத்து சீரமைக்க வேண்டியிருந்தது. இதற்கு நுட்பமான திட்டமிடலும், மகப்பேறு மருத்துவக் குழுவுடன் ஒருங்கிணைப்பும் தேவைப் பட்டது. அனைத்துத் துறை மருத்துவா்களின் ஒத்துழைப்புடன் அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. தொடா் கண்காணிப்பில் இருந்த அவருக்கு நரம்பு மண்டல செயல்பாடுகள் முன்னேற்றமடைந்து, ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்தாா். தாயும், குழந்தையும் தற்போது நலமாக உள்ளனா். இந்த அறுவைச் சிகிச்சையின் போது, மயக்கவியல் துறையின் மருத்துவா்கள் மகாராஜன், ராஜேஷ், வெற்றிவேல் ஆகியோரின் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது என்றனா்.

இந்த பேட்டியின் போது மருத்துவ அதிகாரி திலீப் உடனிருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.