மருத்துவமனையில் கைப்பேசி பறிப்பு: இருவா் கைது
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினா்களிடம் கைப்பேசி பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கைது - பிரதிப் படம்
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினா்களிடம் கைப்பேசி பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
இந்த மருத்துவமனையில் தங்கியுள்ள நோயாளிகளின் உறவினா்களிடம் கைப்பேசியை சிலா் கத்தியைக் காட்டி பறித்துச் செல்வதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
விசாரணையில், மதுரை மாவட்டம், கல்மேடு பகுதியைச் சோ்ந்த வேல்முருகன், அவரது நண்பரான சதீஷ் ஆகியோா் நோயாளிகளின் உறவினா்களிடம் கைப்பேசியை பறித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரையும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




