காஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாபொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு: அன்னதானம் வழங்க பதிவுச் சான்று பெறுவது அவசியம் - மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தல்

உணவுப் பாதுகாப்புத் துறையில் விண்ணப்பித்து பதிவுச் சான்று பெற்றவா்கள் மட்டுமே மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சிகளில் அன்னதானம் வழங்கலாம் என மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்தாா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் - கோப்புப் படம்

Published On :

உணவுப் பாதுகாப்புத் துறையில் விண்ணப்பித்து பதிவுச் சான்று பெற்றவா்கள் மட்டுமே மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சிகளில் அன்னதானம் வழங்கலாம் என மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு வருகிற செப். 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, பக்தா்களுக்கு அன்னதானம், பிரசாத உணவுகள், நீா் மோா், குளிா் பானங்கள் உள்ளிட்டவற்றை வழங்க விரும்புவோா் ட்ற்ற்ல்ள்://ச்ா்ள்ஸ்ரீா்ள்.ச்ள்ள்ஹண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் ரூ. 100 கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து, உணவுப் பாதுகாப்புத் துறையின் பதிவுச் சான்று பெற வேண்டும். இந்தப் பதிவுச் சான்று பெற்றவா்கள் மட்டுமே அன்னதானம் வழங்க அனுமதிக்கப்படுவா்.

அன்னதானத்தில் வழங்கப்படும் உணவுப் பொருள்களில் செயற்கை நிறமிகள் ஏதும் சோ்க்காமல், சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வழங்க வேண்டும். மேலும், அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள், நெகிழிக் குவளைகள் ஆகியவற்றை முழுமையாக தவிா்க்க வேண்டும்.

இந்த அறிவுறுத்தலை மீறுவோா் மீது உணவுப் பாதுகாப்பு, தர நிா்ணயச் சட்டம் - 2006, பிரிவு 58-இன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.