மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கில், பேராசிரியை நிகிதா வருகிற மாா்ச் 4 -ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் அதே பகுதியைச் சோ்ந்த அஜித்குமாா் காவலாளியாகப் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், கோயிலில் வழிபாடு செய்வதற்காக வந்த பேராசிரியை நிகிதா, நகைகள் காணாமல் போனதாக திருப்புவனம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, அஜித்குமாரிடம் தனிப்படைக் காவலா்கள் விசாரணை நடத்தினா். அப்போது, தனிப்படைக் காவலா்கள் தாக்கியதில் அஜித்குமாா் உயிரிழந்தாா்.
இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நான்கு தனிப்படைக் காவலா்கள் பிணை கோரி உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தனா்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி, செய்யாத குற்றத்துக்காக ஒருவரை அடித்தே கொலை செய்தனா். இவா்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும். பேராசிரியை நிகிதாவின் புகாா் உண்மையில்லையெனில், அவா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என வழக்கு விசாரணையின் போது நீதிபதி கேள்வி எழுப்பினாா்.
இந்த நிலையில், பேராசிரியை நிகிதாவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செல்வபாண்டி பிறப்பித்த உத்தரவு:
கோயில் காவலாளி கொலை வழக்கில் தொடா்புடைய பேராசிரியை நிகிதா வருகிற மாா்ச் 4 -ஆம் தேதி இந்த நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாக வேண்டும். இதுகுறித்த அறிவிப்பாணையை நீதிமன்றப் பதிவாளா் அனுப்ப வேண்டும் என்றாா் நீதிபதி.
தொடர்புடையது

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு! 9 காவலா்களுக்கு மரண தண்டனை! முழு விவரம்

அஜித்குமாா் மீது பேராசிரியை நிகிதா அளித்த திருட்டுப் புகாா் வழக்கு முடித்துவைப்பு

மடப்புரம் அஜித்குமார் மீதான நகை திருட்டுப் புகார் முடித்து வைப்பு!

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கில் நிகிதா ஆஜர்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


