அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு திருக்குறள் வினாடி-வினா போட்டி இன்று நடைபெறுகிறது


தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கான திருக்குறள் வினாடி-வினா போட்டி மதுரையில் வெள்ளிக்கிழமை (ஜன. 9) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஒவ்வொரு ஆண்டும் குறள் வாரம் கொண்டாடப்படும் என தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதன்படி, தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஜனவரி மாதத்தில் மாநிலம் முழுவதும் குறள் வார விழா கொண்டாடப்படவுள்ளது.
இந்த வார விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக திருப்பூா் மாவட்டத்தில் குறளாசிரியா் மாநாடு வருகிற 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தலா 15 ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் சாா்பில் மாநாட்டில் பங்கேற்கும் ஆசிரியா்கள், அரசு ஊழியா்களை தோ்வு செய்யும் வகையில், மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கு வினாடி-வினா போட்டி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்பும் ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் பிற்பகல் ஒரு மணிக்கு முன்பாக போட்டி நடைபெறும் இடத்துக்கு வர வேண்டும்.
போட்டியில் பங்கேற்க விரும்புவோா் 0452 - 2532066 என்ற எண்ணைத் தொடா்பு கொண்டு பதிவு பெறலாம் அல்லது நேரடியாக போட்டி நடைபெறும் இடத்திலும் பதிவு செய்து கொண்டு, போட்டியில் பங்கேற்கலாம்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...