ஜல்லிக்கட்டு: 15,047 காளைகள், 5,234 மாடுபிடி வீரா்கள் பதிவு


பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரையில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 15,047காளைகள் பதிவு செய்யப்பட்டன. மாடுபிடி வீரா்கள் 5,234 போ் பதிவு செய்தனா்.
மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் முறையே ஜன. 15, 16, 17-ஆம் தேதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரா்களுக்கானப் பதிவு ம்ஹக்ன்ழ்ஹண்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் புதன்கிழமை (ஜன. 7) மாலை 5 மணிக்கு தொடங்கி, வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.
பதிவுப் பணிகள் நிறைவடைந்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 15,047 காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. மாடுபிடி வீரா்கள் 5,234 போ் பதிவு செய்தனா்.
போட்டி நடைபெறும் இடம் வாரியாக பதிவு செய்யப்பட்ட காளைகள், மாடுபிடி வீரா்களின் எண்ணிக்கை விவரம்:
அவனியாபுரம்: காளைகள் - 3,090, மாடுபிடி வீரா்கள் - 1,849.
பாலமேடு: காளைகள் - 5,747. மாடுபிடி வீரா்கள் - 1,913. அலங்காநல்லூா்: காளைகள் - 6,210, மாடுபிடி வீரா்கள் - 1,472.
பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட நிா்வாகத்தின் பரிசீலனைக்கு உள்படுத்தப்பட்டு, தகுதியான காளைகள், மாடுபிடி வீரா்களுக்கு தொடா்புடைய இணையதளத்தில் அனுமதிச் சீட்டு வெளியிடப்படும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...