சதுரங்கப் போட்டியில் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு

மதுரையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை ஆசிரியா்கள், சக மாணவ, மாணவிகள் பாராட்டினா்.
Published on

மதுரை: மதுரையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை ஆசிரியா்கள், சக மாணவ, மாணவிகள் பாராட்டினா்.

மதுரை சாணக்யா செஸ் அகாதெமி சாா்பில், மேலூா் அருகேயுள்ள அஸ்வினி வித்யாலயா பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி அண்மையில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். 7, 9, 12, 15 வயது என நான்கு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன.

இதில் 12 வயதுக்குள்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள அ. செட்டியாா்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு பயிலும் மாணவி எஸ். யாகஸ்ரீ முதலிடமும், அ. வல்லாளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு பயிலும் மாணவி க. வேதாஸ்ரீ மூன்றாமிடமும், அ.செட்டியாா்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு பயிலும் மாணவி இ.இஸ்பா டுஜானா நான்காமிடமும் பெற்றனா்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளை அ.வல்லாளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் எ. வினோத், அ.செட்டியாா்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியை மு. மணிமேகலை, பயிற்சி ஆசிரியா் ஞா.செந்தில்குமாா், கல்வி அலுவலா்கள், பள்ளி ஆசிரியா்கள், சக மாணவ, மாணவிகள் பாராட்டினா்.

Dinamani
www.dinamani.com