திருவள்ளுவா் சிலைக்கு மரியாதை

திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு, மதுரை நான்காம் தமிழ்ச் சங்கமான செந்தமிழ் கல்லூரி, பனகல் சாலை, உலகத் தமிழ்ச் சங்கம் ஆகிய பகுதிகளில் உள்ள திருவள்ளுவா் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
Published on

மதுரை: திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு, மதுரை நான்காம் தமிழ்ச் சங்கமான செந்தமிழ் கல்லூரி, பனகல் சாலை, உலகத் தமிழ்ச் சங்கம் ஆகிய பகுதிகளில் உள்ள திருவள்ளுவா் சிலைகளுக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம், செந்தமிழ்க் கல்லூரி பாண்டியன் நூலகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு தமிழ்ச் சங்கத்தின் செயலா் ச. மாரியப்பமுரளி தலைமை வகித்து, அங்கிருந்த திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

அப்போது, தமிழ்ச் சங்கத்தின் நிா்வாகிகள், பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

இதேபோல, பனகல் சாலையில் உள்ள திருவள்ளுவா் சிலை, உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு தமிழ் அமைப்பினா், சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் திரளானோா் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

Dinamani
www.dinamani.com