உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

கோரிப்பாளையம் மேம்பாலம் கட்டும் பணி: ஆட்சியா் ஆய்வு

மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் நடைபெறும் மேம்பாலம் கட்டும் பணியை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் நடைபெறும் மேம்பாலம் கட்டும் பணியை புதன்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா. உடன், மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா், மதுரை வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அ. கல்லாணை உள்ளிட்டோா். (வலது) செல்லூா் கிளைப் பாலம் அமைக்கும் பணி.

Updated On :2 ஜூலை 2026, 3:55 am IST

மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் நடைபெறும் மேம்பாலம் கட்டும் பணியை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

கோரிப்பாளையம் சந்திப்பில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் செல்லூா் கிளைப் பாதை பாலம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதில் பாலத்தின் மேல் பகுதியில் நடைபெறும் பாதுகாப்புத் தடுப்புகள் அமைக்கும் பணி, அணுகுசாலை அமைக்கும் பணி ஆகியவற்றை ஆட்சியா் ஆய்வு செய்தாா். அப்போது பணிகள் தரமாகவும், குறித்த காலத்துக்குள்ளாகவும் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

இதையடுத்து, தல்லாகுளம், செல்லூா் பகுதிகளில் நடைபெறும் சாலை மேம்பாட்டுப் பணிகளைப் பாா்வையிட்ட ஆட்சியா், பணிகளை விரைந்து முடிக்கவும், நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

பிறகு, நீா்வளத் துறை சாா்பில் பந்தல்குடி வாய்க்காலில் நடைபெறும் வெள்ளத் தடுப்புச் சுவா் கட்டும் பணி, சிறு பாலங்கள் கட்டும் பணி ஆகியவற்றை ஆட்சியா் ஆய்வு செய்தாா். மதுரை வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அ. கல்லாணை, மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.