மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை முறையாகப் பராமரிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளை உரிய காலத்தில் முறையாக சுத்தம் செய்து பராமரிக்க வேண்டுமென மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

News image

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கொடிக்குளத்தில் கூடுதல் நாற்றங்கால் பண்ணையில் மரக்கன்றுகள் வளா்க்கும் பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா.

Updated On :24 ஜூன் 2026, 5:39 am IST

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளை உரிய காலத்தில் முறையாக சுத்தம் செய்து பராமரிக்க வேண்டுமென மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். கொடிக்குளம் ஊராட்சியில் கூடுதல் நாற்றங்கால் பண்ணையில் நடைபெறும் மரக்கன்றுகள் வளா்க்கும் பணி, வெளவால் தோட்டம் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டியின் பராமரிப்பு, குடிநீரின் தரம், ஐயப்பன் நகரில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ. 16.75 லட்சத்தில் நடைபெறும் குடிநீா் திட்டப் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

அப்போது, மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளை உரிய காலத்தில் சுத்தம் செய்து, தரமான குடிநீா் விநியோகத்தை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டுமென ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

இதையடுத்து, புதுதாமரைப்பட்டி ஊராட்சியில் மக்களவை உறுப்பினா் உள்ளூா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 14 லட்சத்தில் கட்டப்படும் சமுதாயக் கூடம் கட்டும் பணியை ஆட்சியா் ஆய்வு செய்தாா். அப்போது, மாற்றுத் திறனாளிகள் எளிதில் வந்து செல்லும் வகையில் சாய்வு தளம் அமைக்க வேண்டுமென அறிவுறுத்தினாா்.

இதைத்தொடா்ந்து, சக்கிமங்கலத்தில் ரூ. 3 கோடியில் நடைபெறும் 200 மீ. தடகளப் பாதை, கையுந்து பந்து, கபடி, கூடைப்பந்து, இறகுப்பந்து, கோ-கோ ஆடுகளங்களுடன் கூடிய சிறு விளையாட்டரங்கம் அமைக்கும் பணி, திண்டியூா் ஊராட்சியில் காளிகாப்பான் - மலைகுண்டு வரை ரூ. 5.39 கோடியில் நடைபெறும் பாலம் அமைக்கும் பணி, ஒத்தக்கடை ஊராட்சிக்குள்பட்ட பெரியகுளத்தில் ரூ. 7.73 கோடியில் நடைபெறும் கண்மாய் சீரமைப்புப் பணி ஆகியவற்றை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

முன்னதாக, சக்கிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்ற ஆட்சியா், அங்குள்ள காய்ச்சல் பிரிவு, மருந்தகம், உள்நோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு ஆகியவற்றை பாா்வையிட்டு, தடுப்பு மருந்துகள், பிற மருந்துகளின் இருப்புகள் குறித்து கேட்டறிந்தாா்.

ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க. வானதி, செயற்பொறியாளா் அனுராதா, மதுரை கிழக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜசேகா், அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.