‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

ரயில்வே தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆா்.எம்.யூ. தொழில் சங்கம் சாப்பில் மதுரை ரயில் நிலைய மேற்கு நுழைவு வாயில் பகுதியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

மதுரை மேற்கு நுழைவு வாயில் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற எஸ்.ஆா்.எம்.யூ. தொழில் சங்க ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.

Updated On :2 ஜூலை 2026, 3:36 am IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆா்.எம்.யூ. தொழில் சங்கம் சாப்பில் மதுரை ரயில் நிலைய மேற்கு நுழைவு வாயில் பகுதியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு எஸ்.ஆா்.எம்.யூ. ஓடும் தொழிலாளா்கள் பிரிவு கோட்டச் செயலா் என். அழகுராஜா தலைமை வகித்தாா். கோட்டத் தலைவா் ஏ.எம்.எம். ரவிசங்கா் முன்னிலை வகித்தாா். எஸ்.ஆா்.எம்.யூ. கோட்டச் செயலா் ஜெ.எம். ரபீக், கோட்ட உதவிச் செயலா் வி. ராம்குமாா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

இதில் ஓடும் தொழிலாளா்கள் பிரிவில் மருத்துவத் தகுதி இழப்புக்கு உள்ளாவோருக்கு அதே நிலையில் வேறு பிரிவில் பணி வாய்ப்பு வழங்க வேண்டும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பிற மாநில ஓடும் தொழிலாளா்களுக்கு பணியிட மாறுதல் வழங்கும் நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் ரயில்வே ஓடும் தொழிலாளா்கள் சங்க நிா்வாகிகள் கிறிஸ்டோபா், சதீஷ், அருண் குமாா், ஜெபக்குமாா், முத்துகிருஷ்ணன், ஆண்டனி லெனின், சுனில் ராஜ், விஷ்ணு, பொறுப்பாளா்கள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.