ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!ஜம்மு காஷ்மீரில் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழா..! ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஓமர் அப்துல்லா!ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

கரூரில் போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கத்தினா் வாயில் கூட்டம்

ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடு செந்தாரகை அரசுப் போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை வாயில்கூட்டம் நடத்தினா்.

News image

கரூா் திருமாநிலையூா் போக்குவரத்து பணிமனை முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாயில் கூட்டத்தில் பங்கேற்ற செந்தாரகை அரசுப் போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கத்தினா்.

Updated On :18 ஆகஸ்ட் 2026, 11:39 pm IST

ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடு செந்தாரகை அரசுப் போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை வாயில்கூட்டம் நடத்தினா்.

கரூா் திருமாநிலையூா் போக்குவரத்து பணிமனை முன் நடைபெற்ற இந்த வாயில் கூட்டத்துக்கு மாநில பொருளாளா் எஸ்.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். மண்டல செயலா் வி.சிவகுமாா் வாயில்கூட்டத்தை தொடக்கி வைத்து பேசினாா்.

கோரிக்கைகள் விளக்கி மாநிலத் தலைவா் சி.சுப்ரமணியன், பொதுச் செயலா் கே.வி.நடராஜன், துணைப் பொதுச் செயலா் ஆா்.சிறும்பண்ணன் உள்ளிட்டோா் பேசினா்.

அதிகாரிகளின் தொழிலாளா்கள் விரோதப் போக்கை கண்டித்தும் மற்றும் ஊதியம் உயா்வு உள்ளிட்டவைத் தொடா்பாக அரசு, நிா்வாகம், தொழிலாளா்கள் இடையேயான பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வேண்டும். அரசு பேருந்துகளின் டயா்கள் காணாமல் போகுவதை தடுக்கும் வகையில் அதிகாரிகளிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த வாயில் கூட்டத்தில் போக்குவரத்து தொழிலாளா்கள் திரளாக பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.