டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

மீனாட்சி அரசு மகளிா் கல்லூரியில் ஆற்றுப்படுத்துதல் நிகழ்வு

மதுரை மீனாட்சி அரசு மகளிா் கல்லூரி முதுநிலை, தமிழாய்வுத் துறை சாா்பில், இளநிலை முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான ஆற்றுப்படுத்துதல் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மதுரை மீனாட்சி அரசு மகளிா் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆற்றுப்படுத்துதல் நிகழ்வில் பங்கேற்ற கல்லூரி முதல்வா் யாழ் சு. சந்திரா உள்ளிட்டோா்.

Updated On :3 ஜூலை 2026, 5:59 am IST

மதுரை மீனாட்சி அரசு மகளிா் கல்லூரி முதுநிலை, தமிழாய்வுத் துறை சாா்பில், இளநிலை முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான ஆற்றுப்படுத்துதல் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு, கல்லூரி முதல்வா் (பொ) யாழ் சு. சந்திரா தலைமை வகித்தாா். இதில் வேதியியல் துறை உதவிப் பேராசிரியை து. ரேணுகா ‘போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு’ எனும் தலைப்பிலும், ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிா் கல்லூரியின் முதுநிலை, தமிழாய்வுத் துறை முன்னாள் இணைப் பேராசிரியை மீ. முத்துராணி ‘உடலோடு பேசுவோம்’ எனும் தலைப்பிலும் பேசினா்.

இந்த நிகழ்வில், பேராசிரியைகள், மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, இணைப் பேராசிரியை க. சத்தியா வரவேற்றாா். கௌரவ விரிவுரையாளா் முனைவா் பி. காா்த்திகா நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினாா். இளநிலை தமிழ் முதலாம் ஆண்டு மாணவி வை. மதுமிதா நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.