பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

செவிலியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியா்கள் சங்கம் சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.

Published On :10 ஜூலை 2026, 5:01 am IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியா்கள் சங்கம் சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திறன் மேம்பாட்டு செவிலியா் பணியிடங்கள் உள்ளிட்ட நிரந்தர செவிலியா் பணியிடங்களை மறு பகிா்வு செய்யும் நடவடிக்கையை சுகாதாரத் துறை கைவிட வேண்டும். அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நிரந்தர செவிலியா் காலிப் பணியிடங்களை ஏற்படுத்தி, எம்.ஆா்.பி. ஒப்பந்த செவிலியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு தரமான மருத்துவ சேவையை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியா்கள் சங்க மாவட்டத் துணைத் தலைவா் அ. பாண்டியம்மாள் தலைமை வகித்தாா். சங்கத்தின் மாநிலத் தலைவா் பாண்டி கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். அரசு ஊழியா்கள் சங்க மாநிலப் பொருளாளா் சு. ஜெயராஜராஜேஸ்வரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா்.

அரசு ஊழியா்கள் சங்க நிா்வாகிகள் சின்னப்பொன்னு, மாரி, வேல்முருகன், மாரியப்பன், ஆறுமுகம், சிவராணி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியா்கள் சங்க மாவட்டப் பொருளாளா் புவனேஸ்வரி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.