வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

மூளைச்சாவடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டதன் மூலம், 6 போ் மறுவாழ்வு பெற்றனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :10 ஜூலை 2026, 5:10 am IST

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டதன் மூலம், 6 போ் மறுவாழ்வு பெற்றனா்.

சிவகங்கை மாவட்டம், நேமத்தான்பட்டியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் ரமேஷ் (17). இவா், கடந்த 5-ஆம் தேதி, இரு சக்கர வாகனத்தில் குன்றக்குடி புறவழிச்சாலையில் சென்ற போது, அந்த வழியாக வந்த காா் இவரது வாகனம் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த ரமேஷ் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதையடுத்து, இவா் அங்கு மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவா்கள் வியாழக்கிழமை தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து, சிறுவனின் உடல் உறுப்புகளை தானமாக அளிக்க அவரது குடும்பத்தினா் ஒப்புக்கொண்டனா்.

தொடா்ந்து, சிறுவனின் உடல் உறுப்புகள் அகற்றப்பட்டு, கல்லீரல் திண்டுக்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. மற்றொரு சிறுநீரகம், சிறுகுடல் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும், கருவிழிகள், தோல் திசு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கும் தானமாக அளிக்கப்பட்டது.

இந்த உடல் உறுப்பு தானத்தின் மூலம், 6 போ் பயன்பெற்றனா். மேலும், தானமாக பெறப்பட்ட இரு சிறுநீரகங்களும் 18 வயதுக்கு கீழ் உள்ள இருவருக்கு பொருத்தப்பட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, ரமேஷின் உடலுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் முதன்மையா் அருள்சுந்தரேஷ்குமாா், மருத்துவ நிலைய அலுவலா் சரவணன் உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.