மக்கள் தொகை கணக்கெடுப்பு: தமிழகத்தில் ஆக.1 - 30 வரை வீடுகள் கணக்கீடு : இணையத்தில் இன்றுமுதல் மக்கள் சுயமாக விவரம் பதிவிடலாம்கரூா், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று வெப்ப அலை மழைக்கால கூட்டத் தொடா்: இன்று பாஜக கூட்டணி கூட்டம் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: இன்று தொடங்கி வைக்கிறாா் பிரதமா் - ரயில்வே துறையில் புதிய அத்தியாயம் சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டைவிட டெங்கு பாதிப்பு குறைவு
/

சர்வதேச செயற்கைக்கோள் தயாரிப்புத் திட்டம்: திருமங்கலம் அரசுப் பள்ளி மாணவிகள் தேர்வு

சர்வதேச அளவிலான மிஷன் சக்தி செயற்கைக்கோள் தயாரிப் புத் திட்டத்துக்கு தமிழகத்திலி குந்து திருமங்கலம் அரசு மேல் நிலைப் பள்ளி மாணவிகள் இரு வர் தேர்வு செய்யப்பட்டனர்.

News image

அரசு மேல் நிலைப் பள்ளி மாணவிகள் ஜமீலா, மோனிகா

Updated On :17 ஜூலை 2026, 9:00 am IST

சர்வதேச அளவிலான மிஷன் சக்தி செயற்கைக்கோள் தயாரிப் புத் திட்டத்துக்கு தமிழகத்திலி குந்து திருமங்கலம் அரசு மேல் நிலைப் பள்ளி மாணவிகள் இரு வர் தேர்வு செய்யப்பட்டனர்.

திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் விண்வெளித் தொழில்நுட்பத் துறையில் தொடர்ந்து தங்களது முத்திரையைப் பதித்து வருகின் றனர். இவர்கள் கடந்த 2022-23-ஆம் ஆண்டில் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா சார்பில் அறிவிக்கப் பட்ட ஆசாதி சாட்-1 செயற் கைக்கோள் தயாரிப்புத் திட்டத் தில் பங்கேற்றனர். தொடர்ந்து, கடந்த 2023-ஆம் ஆண்டில்

ஆசாதி சாட்-2 செயற்கைக் கோன் தயாரிப்புத் திட்டத்திலும் பங்கேற்றனர். இதற்காக இந்தப் பள்ளி மாணவிகள் இந்திய விண் வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை (இஸ்ரோ) நேரடியாகப் பார்வை யிடும் வாய்ப்பைப் பெற்றனர்.

இந்தநிலையில், உலக அளவில் 108 நாடுகளிலிருந்து சுமார் 12 ஆயிரம் மாணவிகள் பங்கேற்கும் மிகப்பெரிய திட்டமாக மிஷன் சக்தி செயற்கைக்கோள் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந் தத் திட்டத்தில் பங்கேற்க இந்திய அளவில் மொத்தம் 21 மாணவி கள் மட்டுமே தேர்வு செய்யப்பட் டனர்.

இவர்களில் தமிழகம் சார்பில் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஜமீலா, பிளஸ் 1 மாணவி மோனிகா ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த மாணவிகளுக்கு திட்டவழி காட்டியாக அதே பள்ளியின் அறிவியல் ஆசிரியை சிந்தியா தேர்வு செய்யப்பட்டார். இஸ்ரோவுடன் இணைந்து

ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவ னம் வடிவமைத்த 120 மணி நேர வரைவுத் திட்டத்தின் அடிப்ப டையில், தேர்வு செய்யப்பட்ட மாணவிகளுக்கு விண்வெளிப் பொறியாளர்கள் நேரடிப் பயிற்சி அனிக்க உள்ளனர்.

இதற்காக வரும் ஆக. 22-ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள கௌதம புந்தா பல்கலைக்கழகத்தில் தொடங்கும் 10 நாள்கள் சிறப்புப் பயிற்சியில் திருமங்கலம் பள்ளி மாணவிகளும் வழிகாட்டி ஆசிரி யையும் பங்கேற்கவுள்ளனர்.

அரசுப் பள்ளி மாணவிக ளின் இந்த விண்வெளிப் பயணக் கனவை ஊக்குவிக்கும் வகை யில், இவர்கள் நொய்டா சென்றுதிரும்புவதற்கான முழு விமா னப் பயணச் செலவை விருதுந கர் தொகுதி மக்களவை உறுப்பி னர் ப.மாணிக்கம் தாகூர் ஏற்றுக் கொண்டார்.

சர்வதேச செயற்கைக்கோள் தயாரிப்புப் பணிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமங்கலம் பள்ளி மாணவிகளுக்கு பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை பாராட்டுவிழாநடைபெற்றது.

இதில் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தலைவர் ஜெயராமன், பள் ளித் தலைமையாசிரியை அருள் ஜோதி, உடற்கல்வி ஆசிரியர் நவ மணி, அறிவியல் ஆசிரியை சிந் தியா ஆகியோர் பங்கேற்று.மாண விகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.