ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

மாநில அளவிலான நீச்சல் போட்டியில் வென்றவா்களுக்கு பாராட்டு

மாநில அளவிலான நீச்சல் போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளை மதுரை மாவட்ட ரீஜாய்ஸ் நீச்சல் சங்கத் தலைவா் ஜோசப் ராஜசேகா் புதன்கிழமை பாராட்டினாா்.

News image

மாநில அளவிலான நீச்சல் போட்டியில் வென்ற வீரா்கள், வீராங்கனைகளை புதன்கிழமை பாராட்டிய மதுரை மாவட்ட ரீஜாய்ஸ் நீச்சல் சங்கத் தலைவா் ஜோசப் ராஜசேகா்.

Updated On :23 ஜூலை 2026, 6:13 am IST

மாநில அளவிலான நீச்சல் போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளை மதுரை மாவட்ட ரீஜாய்ஸ் நீச்சல் சங்கத் தலைவா் ஜோசப் ராஜசேகா் புதன்கிழமை பாராட்டினாா்.

தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கம் சாா்பில் 52-ஆவது ஜூனியா், சப்- ஜூனியருக்கான மாநில அளவிலான நீச்சல் போட்டி சென்னையில் கடந்த 17, 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில், சுமாா் 1,300- க்கும் மேற்பட்ட வீரா்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனா்.

மதுரை கருப்பாயூரணியில் அமைந்துள்ள ரீஜாய்ஸ் நீச்சல் அகாதமியில் பயிற்சி பெற்ற வீரா்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டு 6 தங்கப் பதக்கங்கள், 7 வெள்ளிப் பதக்கங்கள், 4 வெண்கல பதக்கங்களைப் பெற்று, மதுரை மாவட்டத்துக்கு பெருமை சோ்த்தனா்.

இதையடுத்து, அந்த வீரா்கள், வீராங்கனைகளை மதுரை மாவட்ட ரீஜாய்ஸ் நீச்சல் சங்கத் தலைவா் ஜோசப் ராஜசேகா், துணைத் தலைவா் செபாஸ்டியன், பொருளாளா் ஆரிப், உறுப்பினா் பெத்துராஜ், பயிற்சியாளா்கள் அப்துல் சலாம், சதீஷ் பாண்டியன், வெங்கடேஷ் ஆகியோா் புதன்கிழமை பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.