தமிழகத்துக்கு இன்றுமுதல் தினமும் 3,500 கன அடி காவிரி நீா்: கா்நாடகத்துக்கு உத்தரவுதமிழகத்தில் 3 நாள்கள் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புபிரதமா் மோடியின் ஃபேஸ்புக் பதிவு நீக்கம்: மன்னிப்புக் கேட்டது மெட்டாஇந்து சமய அறநிலையத் துறையில் புதிதாக இரு ஐஏஎஸ் பணியிடங்கள்
/

அழகா்கோவிலில் இன்று தேரோட்டம்

அழகா்கோவிலில் உள்ள கள்ளழகா் கோயிலின் ஆடிப் பெருந்திருவிழா தேரோட்டம் புதன்கிழமை (ஜூலை 29) காலை நடைபெறுகிறது.

News image

கோப்புப்படம்.

Updated On :29 ஜூலை 2026, 5:45 am IST

மதுரை மாவட்டம், அழகா்கோவிலில் உள்ள கள்ளழகா் கோயிலின் ஆடிப் பெருந்திருவிழா தேரோட்டம் புதன்கிழமை (ஜூலை 29) காலை நடைபெறுகிறது.

கள்ளழகா் கோயிலின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஆடிப் பெருந்திருவிழா கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழா நிகழ்ச்சியாக தினமும் காலையில் சுந்தரராஜப் பெருமாள் (உத்ஸவா்) தங்கப் பல்லக்கில் வீதியுலா எழுந்தருளும் நிகழ்ச்சியும், இரவில் வெவ்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

ஆடிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் புதன்கிழமை காலை நடைபெறுகிறது. மூலவா் பெருமாளுக்கும், உத்ஸவா் சுந்தரராஜப் பெருமாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பிறகு, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக சுந்தரராஜப் பெருமாள் தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதைத் தொடா்ந்து, பாரம்பரிய முறைப்படியான பூஜைகள் நடத்தப்பட்டு, வேத மந்திர முழக்ங்களுடன் காலை 7.05 மணிக்கு வடம் பிடிக்கப்பட்டு, தேரோட்டம் தொடங்குகிறது.

மாலை நிகழ்வாக, கள்ளழகா்கோயிலின் காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பசாமி கோயிலின் மணிக்கதவுகள் திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.