ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

தங்கத் தேர் திருவிழா.. எந்த கோயிலில் என்ன விசேஷம்?

அடுத்த ஒரு வாரத்திற்கு எந்த கோயிலில் என்ன விசேஷம் என்று தெரிந்து கொள்ளலாம்.

News image

தங்கத் தேர் வீதியுலா - file photo

Updated On :10 ஜூலை 2026, 5:00 pm IST

வேலூர் மாவட்டம், குடியாத்தம், கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் திருக்கோயில் ஆனிமாத பால்குடப் பெருவிழா ஜூலை10 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெறும்.

காஞ்சிபுரம், அருள்மிகு ஏகாம்பரநாதர் கோயிலில் ஜூலை 12-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 7 மணியளவில் தங்கத் தேர் திருவிழா நான்கு ராஜவீதியில் நடைபெறும்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம், அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் ஜூலை12 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேய்பிறை பிரதோஷ விழா மாலை 4.30 மணிமுதல் 6 மணிவரை நடைபெறும்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், ஸ்ரீ புஷ்பவனநாதர் உடனுறை ஸ்ரீ சௌந்தரநாயகி தாயார் கோயிலில் ஜூலை 12 }ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) உழவாரப்பணி நடைபெறுகிறது.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் திருமடத்தில், ஆதீன முதற்குரவர் ஸ்ரீலஸ்ரீ பாலசித்தர் மகா குருபூஜை விழாவை முன்னிட்டு அவரது குருமூர்த்தத்துக்கு ஜூலை 13}ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 7 மணிக்கு அபிஷேக ஆராதனைகள், அதைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் ஆடித்தவசு திருவிழா ஜூலை 18 ஆம் தேதி காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்கி ஜூலை 29}ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முக்கிய நிகழ்வான தவசுக்காட்சி ஜூலை 28 }ஆம் தேதி மாலை 6.05 மணிக்கும், இரவுக்காட்சி 11.45 மணிக்கும் நடைபெறும்.

தஞ்சாவூர் மாவட்டம், பெருவுடையார் கோயிலில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு மஹா வாராஹி அம்மனுக்கு 24}ஆம் ஆண்டு ஆஷாட நவராத்திரிப் பெருவிழா ஜூலை 13}ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் 23 ஆம் தேதி (வியாழக்கிழமை) வரை நடைபெறுகிறது.

தஞ்சை மூலை அனுமார் கோயிலில் ஆனி மாத அமாவாசை சிறப்பு வழிபாடு ஜூலை 14}ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவிலும், மாலை 6 மணியளவில் சிறப்பு அலங்காரமும் நடைபெறுகிறது.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், பாரியூர், வெள்ளாள பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சிவகாமி அம்மை உடனுறை ஸ்ரீமத் ஆனந்த நடராஜப்பெருமான் கோயிலில் திருவாதிரை கட்டளை பூஜை, எம்பிரான் திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் முற்றோதுதல் ஜூலை 13}ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 9.30 மணிக்கும், சத்ரு சம்ஹார சஷ்டி வேல் பூஜை ஜூலை 19 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிமுதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.