* விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் காளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் மே 29-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது.
* திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி சிவகாமி அம்பாள் உடனுறை திருக்கடுக்கை மூன்றீஸ்வரர் கோயில் திருவிளக்கு பூஜை மே 30 (சனிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.
* வந்தவாசி அருகில் செüந்தர்யபுரம் கிராமத்தில் ஸ்ரீ அம்புஜவல்லி சமேத ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் ஸ்ரீமகாலட்சுமி மகா யாகம் மே 30, 31-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
* விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள மேல் ஒலக்கூர் பசுமலை வள்ளி, தேவசேனா உடனுறை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயிலில் வைகாசி விசாக பால்குட விழா மே 30-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
* கும்பகோணம் அருகில் தேப்பெருமாள்நல்லூர் ஸ்ரீ லெட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு நடைபெறும் முக்கிய நிகழ்வுகள்: மே 30 காலை 7 மணிக்கு கருடசேவை, ஜூன் 1 காலை 9.30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம்.
* சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி திருக்கச்சி நம்பிகள், வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவத்தில் மே 30 - கருட சேவை, ஜூன் 3 - திருத்தேர், ஜூன் 4 - வெண்ணெய்த் தாழி உற்சவம் நடைபெறும்.
* வேலூர் மாவட்டம், குடியாத்தம், சந்தைப்பேட்டை, சீதாராம ஆஞ்சநேய சுவாமி கோயில் 94-ஆம் ஆண்டு கருடசேவை உற்சவத்தில் மே 30}ஆம் தேதி காலை 5 மணிக்கு கோபுர தரிசனமும், காலை 7 மணிக்கு கருடவாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெறும்.
* சென்னை கிண்டி ரயில் நிலையம் அருகேயுள்ள ஸ்ரீ கோழிபி சுவாமிகள் (ஸ்ரீ சத்யானந்தர் சித்தர்) சந்நிதியில் பௌர்ணமி சிறப்பு பூஜை மே 31-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் நடைபெறுகிறது.
* ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்தரகோச மங்கை அருகில் உள்ள எக்ககுடி ஸ்ரீலஸ்ரீ சூட்டுக்கோல் செல்லப்ப சுவாமிகள் ஜீவ சமாதியில் மே 31}ஆம் தேதி காலை 8 மணி அளவில் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
* சென்னை மேற்கு சைதாப்பேட்டை பார்ஸன் நகரில் ஓம் ஸ்ரீ மஹாசத்சங்கம் டிரஸ்ட் சார்பில் ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா 133}ஆவது ஜெயந்தி மகோத்ஸவம் மே 31}ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை மகாபெரியவா விக்ரகத் திருமேனி வீதியுலா நடைபெறும்.
* கோயம்புத்தூர், பேரூர் ஸ்ரீ மகாபெரியவா மணி மண்டபத்தில், ஸ்ரீஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி உற்சவம் மே 29 முதல் 31 வரை நடைபெற இருக்கிறது.
* சென்னை, சூளை அருள்மிகு சொக்கவேல் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் ஆண்டுப்பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக மே 30}ஆம் தேதி காலை 108 சங்காபிஷேகமும், தீர்த்தவாரியும், மாலை மயில்வாகனத்தில் சண்முகர் திருவீதிப் புறப்பாடும் நடைபெறும்.
* தஞ்சை மாவட்டம், திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் குருப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு ஜூன் 3}ஆம் தேதி லட்சார்ச்சனையும், ஜூன் 5, 6 , 7 -ஆம் தேதிகளில் சிறப்பு பரிகார ஹோமமும் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









