கறிக் கோழிகளை வெட்டுவதற்கு முன்னா் தீவனம் நிறுத்தப்படுவதைக் கண்காணிக்க குழு அமைக்கக் கோரிய மனு தொடா்பாக கால்நடைத் துறை இயக்குநா் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
புதுக்கோட்டையைச் சோ்ந்த ராஜ் முஹம்மது சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: தமிழக கால்நடை மருத்துவ அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, கறிக் கோழிகளை வெட்டுவதற்கு முன்னரும், பண்ணைகளிலிருந்து விற்பனைக்காக அனுப்புவதற்கு முன்னரும் 20 முதல் 24 மணி நேரம் வரை தீவனம் அளிக்கக் கூடாது.
இருப்பினும், கோழிப் பண்ணை உற்பத்தியாளா்கள் வாகனங்களில் ஏற்றப்படும் கடைசி நிமிடம் வரை கறிக் கோழிகளுக்கு கட்டாயமாக தீவனம் அளித்து, அவற்றின் எடையை செயற்கையாக அதிகரிக்கச் செய்கின்றனா். இதனால், அதிகளவில் கழிவுகள் வெளியேறி கோழிகள் சுகாதாரமற்ற சூழலில் கொண்டு வரப்படும் நிலை ஏற்படுகிறது. இதனால், பொதுமக்களின் உடல் நலத்துக்கு கடும் பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே, கறிக் கோழிகளை பண்ணைகளிலிருந்து அனுப்புவதற்கு முன் 20 முதல் 24 மணி நேரம் தீவனம் அளிக்கப்படாமல் இருப்பதை கட்டாயமாக அமல்படுத்த கண்காணிப்புக் குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த மனு தொடா்பாக கால்நடைத் துறை இயக்குநா், உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையா் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற செப்டம்பா் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விளம்பர நோக்கத்துக்காக தாக்கல் செய்யப்படும் மனுக்கள் ஏற்கத்தக்கதல்ல: உயா்நீதிமன்றம்

கா்ப்பிணி உயிரிழப்பு குறித்து சிறப்புக் குழு விசாரிக்கக் கோரி மனு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

அரசு நிலத்தை கோயில் நிலம் என மீட்கக் கோரி மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.10,000 அபராதம்!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ராமநாதபுரம் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!



